TNPSC Group - I -Main Exam - 2025 - Registration Form

வணக்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 15-06-2025 அன்று நடத்தப்பட்ட குரூப்-1 முதல் நிலை தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று 28-08-2025 வெளியிடப்பட்டுள்ளது. (01-12-2025 முதல் 04-12-2025 வரை முதன்மை தேர்வுகள் நடைபெற உள்ளது).இதன் தொடர்ச்சியாக மனிதநேய கட்டணமில்லா I.A.S பயிற்சி மையம் சார்பாக அடுத்த கட்டமாக நடைபெறக்கூடிய முதன்மைத் தேர்வுக்கு தொடர் மாதிரி தேர்வுகள், பயிற்சி குறிப்புகள், பிரத்தியேக வகுப்புகள் நடைபெற உள்ளன. இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அனைவரும் கீழ்காணும் படிவத்தை பூர்த்தி செய்து பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தொடர் மாதிரி தேர்வுகளுக்கான அட்டவணை மற்றும் இதர விவரங்கள் விரைவில் மனிதநேய இணையதளத்தில் (www.mntfreeias.com) வெளியிடப்படும்.

நன்றி

அன்புடன்

சைதை துரைசாமி.

Scroll to Top